சென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது
சென்னை டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு கொடுத்து மதுபாட்டில் வாங்கியவர் கைது.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுபாட்டில்கள் வாங்கினார். அதற்கு அவர் நான்கு 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அந்த நோட்டுகள் கள்ள நோட்டு என்று தெரிந்தது. கடை ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்தனர்.
துணை கமிஷனர் பகலவன், உதவி கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில், திருவல்லிக்கேணி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
கள்ள நோட்டை மாற்றிய நபரின் பெயர் அப்துல் ரஷீத் (வயது 59) என்று தெரியவந்தது. வேலூர் பகுதியைச் சேர்ந்த இவர் வேலை தேடி சென்னை வந்து திருவல்லிக்கேணியில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார். அவர் கள்ள நோட்டை உணவகம் ஒன்றில் வாங்கியதாக கூறினார். அந்த உணவகத்தில் போலீசார் விசாரித்தபோது, அப்துல்ரஷீத் கூறியது தவறு என்று தெரிய வந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Tags :
Next Story