தொண்டர்கள் துணையுடன் அ.தி.மு.க.வை மீட்பேன் சசிகலா பேச்சு
தொண்டர்கள் துணையுடன் அ.தி.மு.க.வை மீட்பேன் சசிகலா பேச்சு.
சென்னை,
விருதுநகரை சேர்ந்த குரு ராமச்சந்திரன், சென்னையை சேர்ந்த புவனேந்திரன், திருப்பத்தூரை சேர்ந்த சமரசன், ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, ஈரோட்டை சேர்ந்த கோபால், பண்ருட்டியை சேர்ந்த உத்திரவேல் ஆகியோருடன் சசிகலா நேற்று பேசினார்.
அதன் விவரம் வருமாறு:-
கட்சியின் மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் கவலைப்பட இனி நான் விடவே மாட்டேன். விரைவில் நான் வந்துவிடுவேன்.
கட்சியை அழிக்க யாரையும் விடமாட்டேன். தொண்டர்கள் துணையுடன் கட்சியை மீட்பேன். ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடம் செல்வேன். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்கிறேன்.
தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யவேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. முதலில் கட்சியை சரி செய்ய வேண்டும். கட்சியை நல்லபடியா வழிநடத்தி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும்.
இவ்வாறு சசிகலா பேசினார்.

Related Tags :
Next Story