கொங்குநாடு என்று தனியே ஒரு மாநிலம்: பெட்ரோல், டீசல், கியாஸ் விலையேற்றத்தை திசை திருப்பும் செயல் கி.வீரமணி அறிக்கை


கொங்குநாடு என்று தனியே ஒரு மாநிலம்: பெட்ரோல், டீசல், கியாஸ் விலையேற்றத்தை திசை திருப்பும் செயல் கி.வீரமணி அறிக்கை
x
தினத்தந்தி 13 July 2021 2:59 PM GMT (Updated: 13 July 2021 2:59 PM GMT)

கொங்குநாடு என்று தனியே ஒரு மாநிலம்: பெட்ரோல், டீசல், கியாஸ் விலையேற்றத்தை திசை திருப்பும் செயல் கி.வீரமணி அறிக்கை.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொங்குநாடு என்று தனியே ஒரு மாநிலமாக பிரிப்பது பற்றி ஒரு புதிய அபரீத அபத்தமான யோசனை புதிதாக விவாத பொருளாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம், கொரோனாவில் கையாண்ட முறை பற்றிய விவாதங்களை திசை திருப்பும் செயலாக இது ஒரு சில நாட்களுக்கு பயன்படட்டுமே என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

தேவையின்றி தமிழ்நாட்டு மக்களிடையே சாதிவெறியை, மதவெறியை தூண்டி வெற்றி பெறலாம் என்ற வீண் கனவு காண வேண்டாம் என எச்சரிக்கிறோம். இது பெரியார் மண். சூழ்ச்சிகளை, சூதர்களை, அரசியல் சூதாடிகளை அடையாளம் கண்டு தோலுரித்து காட்டி, விழிப்புணர்வு வெளிச்சத்தை எப்போதும் காட்டும் திராவிட பொன்நாடு தமிழ்நாடு என்பதை உணர்த்த ஒருபோதும் தயங்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story