மாவட்ட செய்திகள்

மேகதாது பிரச்சினை: இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையில் பேசுவதா? கர்நாடக மந்திரிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் + "||" + Cloud issue: Speaking in a way that disrupts bilateral relations? Dr. Ramdas condemns Karnataka minister

மேகதாது பிரச்சினை: இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையில் பேசுவதா? கர்நாடக மந்திரிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

மேகதாது பிரச்சினை: இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையில் பேசுவதா? கர்நாடக மந்திரிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மேகதாது பிரச்சினை: இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையில் பேசுவதா? கர்நாடக மந்திரிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக உள்துறை மந்திரி கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக மந்திரியின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது. அங்கு அணையை கட்டக்கூடாது என்று தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.


கோர்ட்டு தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு உள்ளிட்ட எதையும் மதிக்காமல் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக மந்திரி தொடர்ந்து பேசி வருவது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களிடையே உறவு தத்துவத்திற்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கர்நாடக மந்திரியின் பேச்சுகளை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிப்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலூரில் பா.ம.க. நிர்வாகி மர்மசாவு: வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும்
கடலூரில் பா.ம.க. நிர்வாகி மர்மசாவு: வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
2. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்
மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் போதைக்கு அடிமையாகி மின்வாரிய பணியாளர் தற்கொலை டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்.
3. அனைத்து சாதி மக்களுக்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உறுதியேற்போம் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு
அனைத்து சாதி மக்களுக்கும் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க உறுதியேற்போம் டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு.
4. இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும்
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.
5. பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல: வாழ்ந்து சாதிக்க வேண்டிய மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது
பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல: வாழ்ந்து சாதிக்க வேண்டிய மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.