தீக்குளித்து பெயிண்டர் தற்கொலை
தீக்குளித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
வாடிப்பட்டி,ஜூலை.
வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43) பெயிண்டர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனை அடைந்த அவர் நேற்று முன் தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கணேசனுக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
Related Tags :
Next Story