டாஸ்மாக் அதிகாரி மனைவியிடம் நகை பறித்த 2 கொள்ளையர்கள் சிக்கினர்


டாஸ்மாக் அதிகாரி மனைவியிடம்  நகை பறித்த 2 கொள்ளையர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 14 July 2021 1:24 AM IST (Updated: 14 July 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளரின் மனைவியிடம் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

உசிலம்பட்டி,
ஜூலை
உசிலம்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளரின் மனைவியிடம் தாலிச்சங்கிலியை பறித்துச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்
உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் சாலையில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு இவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரது மனைவியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து மகேந்திரன் உசிலம்பட்டி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தனிப்படை அமைப்பு
மேலும் இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் கொள்ளையர்களை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் ஏட்டுகள் செல்வகுமார், முத்துராமன், ஜெகன், ரியாஸ், பிரேம்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 
இந்த தனிப்படையினர் நகை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். இதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த  கிருஷ்ணன் (வயது 46), வடிவேல் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 பவுன் தாலி சங்கிலியை கைப்பற்றினர்.
2 பேருக்கு வலைவீச்சு
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய காமாட்சிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 
விரைவாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Next Story