சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 14 July 2021 11:11 AM IST (Updated: 14 July 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

தண்டையார்பேட்டை, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்தனர்.

பெரம்பூர், 

தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர். நஜூகான் (வயது 31). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தை உள்ளனர். இவர் அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில், போலீசார் விசாரிக்க சென்ற நிலையில், ஆட்டோ டிரைவர் நஜூகான் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தலைமறைவாக இருந்த நஜூகானை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நஜூகானை மீட்டு விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story