குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு கலெக்டர் நடவடிக்கை


குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 July 2021 9:34 PM IST (Updated: 14 July 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

குண்டர் சட்டத்தில் 2 பேரை சிறையில் அடைக்க கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

காஞ்சீபுரம்,

சிவகாஞ்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குன்றத்தூர், பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்கிற லோகு என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் பல்வேறு கொலை முயற்சி, அடிதடி மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட பொய்யாக்குளம், ஐதர்பேட்டையை சேர்ந்த ஹரி என்ற ஹரிகிருஷ்ணன் என்பவரை விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில்...

காஞ்சீபுரம் பகுதிகளில் தொடர்ந்து இருவரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் லோகநாதன், ஹரி இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story