அம்பத்தூரில் கார் உதிரிபாகம் விற்பனை கடையில் தீ விபத்து


அம்பத்தூரில் கார் உதிரிபாகம் விற்பனை கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 14 July 2021 10:15 PM IST (Updated: 14 July 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் கார் உதிரிபாகம் விற்பனை கடையில் தீ விபத்து.

திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான கார்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை இந்த கடையில் இருந்து புகை வருவதாக அப்பகுதி மக்கள் அம்பத்தூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சையத் முபாரக் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். தீ மளமளவென பற்றி புகை வெளியேறிய நிலையில் போலீசார் அங்கு வந்த குடிநீர் லாரிகளை மடக்கி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதில், லட்சக்கணக்கான பொருட்கள் நாசமாயிருக்கலாம் எனவும் தெரியவந்தது.


Next Story