வீட்டில் பதுக்கிய 40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 15 July 2021 1:03 AM IST (Updated: 15 July 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கிய 40 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை
மதுரையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மேலூர் அருகே வீடு ஒன்றில் ரேஷன் அரிசி அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே போலீசார் மேலூர் அருகே நாகப்பன்பட்டியில் உள்ள சந்திரன்(வயது 50) என்பவர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு 40 மூடைகளில் 1,600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலூர், நாகப்பன்பட்டியைச் சுற்றியுள்ள பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை சந்திரன் வாங்கியிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
1 More update

Next Story