த.மு.மு.க. அலுவலகத்தில் இருதரப்பினர் மோதல் போலீஸ்காரர் காயம்


த.மு.மு.க. அலுவலகத்தில் இருதரப்பினர் மோதல் போலீஸ்காரர் காயம்
x
தினத்தந்தி 15 July 2021 4:56 PM IST (Updated: 15 July 2021 4:56 PM IST)
t-max-icont-min-icon

த.மு.மு.க. அலுவலகத்தில் இருதரப்பினர் மோதல் போலீஸ்காரர் காயம்.

பெரம்பூர்,

சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் த.மு.மு.க. கட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு நேற்று முன்தினம் இரவு ஒரு தரப்பினர் கட்சி பெயர் பலகை மற்றும் கொடி வைத்ததாகவும், இதனை ஏற்றுக்கொள்ளாத மற்றொரு தரப்பினர், அவற்றை அகற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, கல்லால் வீசி தாக்கிக்கொண்டதாக தெரிகிறது. வடக்கு கடற்கரை போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்ய முயன்றனர். இந்த மோதலில் போலீஸ்காரர் அருண்குமார் (26) காயம் அடைந்தார். இருதரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் துரைராஜ், பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு பிறகு மோதல் கைவிடப்பட்டது.

இதுபற்றி இரு தரப்பினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story