மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர், காமராஜர், அண்ணா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு + "||" + Thiruvalluvar, Kamarajar, Anna awards can apply for the Government of Tamil Nadu notice

திருவள்ளுவர், காமராஜர், அண்ணா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

திருவள்ளுவர், காமராஜர், அண்ணா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
திருவள்ளுவர், காமராஜர், அண்ணா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு.
சென்னை,

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழ் அறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், தை மாதம் 2-ம் நாள் நடைபெற உள்ள திருவள்ளுவர் திருநாளில், திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேரறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.


இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவர குறிப்புகளுடன் நிழற்படம் 2, எழுதிய நூல்களின் பெயர்பட்டியலுடன் அந்த நூல்களில் ஒரு படி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களை 044-28190412, 28190413 என்ற எண்ணிலும், tamilvalarchithurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ் வளர்ச்சி இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் தான் அடிக்கப்படுகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் தான் அடிக்கப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
2. புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3. பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு
பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. தொழிற்சாலை ஊழியர்களுக்கு 2 தவணை தடுப்பூசி கட்டாயம் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது
தொழிற்சாலை ஊழியர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்றும், பணியிடங்களில் ஊழியர்கள் முக கவசம் அணிந்திருப்பதை நிர்வாகம் தரப்பில் கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
5. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி - அரசு அறிவிப்பு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு, தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை