மேகதாது அணை பிரச்சினை: கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்க கூடாது மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


மேகதாது அணை பிரச்சினை: கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்க கூடாது மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2021 8:28 PM IST (Updated: 15 July 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணை பிரச்சினை: கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்க கூடாது மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் மத்திய நீர்வளத்துறை மந்திரி கூறியிருக்கிறார். மேகதாது விவகாரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்ற கர்நாடக முதல்-மந்திரியின் கோரிக்கையை தமிழகம் நிராகரித்து விட்ட நிலையில், கர்நாடகாவின் குரலை மத்திய மந்திரி எதிரொலிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மேகதாது அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்பதுதான் சட்டப்படியான இன்றைய நிலையாகும். எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டும், காவிரி நடுவர் மன்றமும் அளித்த தீர்ப்புகளையும், 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தையும் செயல்படுத்தும் அமைப்பாகவே மத்திய அரசு இருக்க வேண்டும். கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story