திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு திடீர் ஆய்வு


திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2021 10:29 PM IST (Updated: 15 July 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு திடீர் ஆய்வு.

பூந்தமல்லி,

பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் ஸ்டாலின். இவர், திடீரென திருவேற்காடு போலீஸ் நிலையம் சென்று ஆய்வு செய்தார். பணியில் இருந்த போலீசாருக்கு வந்திருப்பது மாஜிஸ்திரேட்டு என்பது உடனடியாக தெரியவில்லை.

பின்னர்தான் அவர் மாஜிஸ்திரேட்டு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் நிலையத்தில் மாஜிஸ்திரேட்டு ஆய்வு செய்தபோது அங்கு 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஆகியோர் அமர வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் எதற்காக அங்கு அமர வைக்கப்பட்டு உள்ளனர்? என கேட்ட மாஜிஸ்திரேட்டு, அவர்கள் தொடர்பான ஆவணங்களுடன் இன்ஸ்பெக்டர் தன்னை வந்து பார்க்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story