வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது
வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது
திருப்பாங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் ரிங் ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மதுரை புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி ஆகியோர் உத்தரவின்பேரில் ஆஸ்டின் பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமியப்பன், கோபிநாத் தலைமையில் போலீசார் நிலையூர், சூரக்குளம் மற்றும் ரிங்ரோடு பகுதியில் ரோந்து சுற்றிவந்தனர்.
இந்த நிலையில் சூரக்குளத்தில் ரோட்டின் கீழ்பகுதியில் அடர்ந்த முட்புதருக்குள் மர்ம மனிதர்கள் மறைந்து இருந்து அந்த வழியாக செல்பவர்களை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டமிட்டு 4 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை கண்ட போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சியை சேர்ந்த ரகுபதி (வயது 29), கொடிவீரன்(22), அருள்பாண்டி(20), ஆறுமுகம் (21) என்று தெரியவந்தது. இவர்கள் வழிப்பறி செய்ய திட்டம் திட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story