வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 July 2021 2:23 AM IST (Updated: 17 July 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பி.ஆர்.சி. காலனியில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கடந்த மாதம் 26-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இதைநோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த பீரோவை உடைத்து 7 பவுன் நகைகள், 400 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்தநிலையில் வீடு திரும்பிய காமராஜ் வீட்டில் திருட்டு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் திருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
1 More update

Next Story