திருவள்ளூரில் 3-ம் பாலினத்தோருக்கு ஆதார், ரேஷன் அட்டை பதிவு முகாம் கலெக்டர் ஆய்வு
திருவள்ளூரில் 3-ம் பாலினத்தோருக்கு ஆதார், ரேஷன் அட்டை பதிவு முகாம் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றில் திருத்தம் மற்றும் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) ராஜராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story