கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அழகர்கோவில்,
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி பிரமோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து நேற்று தமிழ் மாத ஆடி முதல் நாள் பிறந்தது. இதையொட்டி சுற்றுவட்டாரங்களில் இருந்தும் வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்து அரசு வழிகாட்டுதல்படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மூலவர் சுந்தரராஜபெருமாள், தேவியர்களை தரிசனம் செய்தனர். உற்சவர் கள்ளழகர் பெருமாள் நேற்று இரவு சிம்ம வாகனத்தில் பள்ளியறை மண்டபத்தில் எழுந்தருளினார். இங்கு பக்தர்கள் தரிசனம் இல்லை. மேலும் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலிலும் பக்தர்கள் விளக்கேற்றி வணங்கினர்.
இதைப் போலவே முருகப் பெருமானின் ஆறாவது படை வீடு சோலைமலை முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும், விநாயகர், ஆதிவேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story