இன்று மின்சாரம் நிறுத்தம்


இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 July 2021 2:09 AM IST (Updated: 20 July 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

எல்லீஸ் நகர், அனுப்பானடி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மதுரை,

எல்லீஸ் நகர் துணை மின்நிலையம், கோவில் துணை மின்நிலையம், அனுப்பானடி துணைமின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரெயில்வே காலனி, சர்வோதயா அனைத்து தெருக்களும், அன்சாரி நகர், வைத்தி யநாதபுரம், டி.பி.ரோடு, சித்தாலாசி நகர், ஹாப்பி ஹோம் 1, 2-வது தெரு, எஸ்.டி.சி. ரோடு, கீழமாசி வீதி, கீழ ஆவணிமூலவீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, வெங்களக்கடை தெரு 1, 2, 3, 4 மற்றும் 5-வது தெரு, சாமி சன்னிதி, கீழ வடம்போக்கி தெரு, கீழ மேஸ்திரி வீதி, கொத்தவாள்சாவடி, ஜடாமுனிகோவில் தெரு கீழ் பகுதி, பழைய வெத்தலைக்கடை தெரு, மெட்டுக்காரத்தெரு, எழுகடல் தெரு, எழுகடல் அக்ரஹாரம், மேலநாப்பாளையம், கீழ நாப்பாளையம், ஆதிநாராயணன்பிள்ளை சந்து, ஆதிமூலம் சந்து, யானைக்கல் சில பகுதிகள்,  வாரியர் நகர் 1-வது தெரு, சாரா நகர், ராஜா நகர், சத்யா நகர், பாபு நகர், கணேஷ் நகர், அந்ே்தாணியர் தெரு, தெய்வக்கன்னி தெரு, வளனார் நகர், கல்லம்பல் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Next Story