மதுரை,
மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 13 தாசில்தார்களை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் இடமாற்றம் செய்து ஆணை வழங்கி உள்ளார். அதன்படி மதுரை மேற்கு சரகம் குடிமைப்பொருள் தாசில்தாராக பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், துணை ஆய்வுக்குழு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை வடக்கு சரக குடிமைப்பொருள் தாசில்தாராக பணியாற்றிய மாரிமுத்து, மதுரை தெற்கு கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மத்திய சரக குடிமைப்பொருள் தாசில்தார் அன்பழகன், உசிலம்பட்டி தாசில்தாராகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பறக்கும் படை பிரிவு தாசில்தார் சிவராம், உசிலம்பட்டி கோட்ட கலால் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருப்பரங்குன்றம் தாலுகா தாசில்தாராக இருந்த மூர்த்தி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார். உசிலம்பட்டி கோட்டக்கலால் அலுவலராக பணியாற்றிய பி.சரவணன் திருப்பரங்குன்றம் தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்..இதுபோல் தாசில்தார் நிலையில் உள்ள 13 பேர் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.