கந்துவட்டி சட்டத்தில் ஒருவர் மீது வழக்கு


கந்துவட்டி சட்டத்தில் ஒருவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 July 2021 2:31 AM IST (Updated: 20 July 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் கந்துவட்டி சட்டத்தில் ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாகமலைபுதுக்கோட்டை,

நாகமலைபுதுக்கோட்டை இ.பி.காலனியை சேர்ந்த ஆனந்தம் பிள்ளை மகன் ராஜா (வயது 44). இவர் கணினி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கீழக்குயில்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடமிருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80 ஆயிரம் வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் அதிக வட்டித் தொகை கேட்டு பாலமுருகன், தன்னை அவதூறாக பேசி மிரட்டுவதாக நாகமலைபுதுக்கோட்டை போலீசில் ராஜா புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் பாலமுருகன் மீது கந்து வட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story