மதுரை,
மதுரை புதூர் மின்சார அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் கருணாநிதி, மண்டல செயலாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில தொழிலாளர்கள் நல செயலாளர் அழகுசுந்தரம், ஐக்கிய பொறியாளர்கள் சங்க இணைச் செயலாளர் முத்துலிங்கம், பொறியாளர் சங்க நிர்வாகி கொண்டல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 2021 மின்சார திருத்த மசோதாவை தாக்கல் செய்ய கூடாது. வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அனைத்து தொழிலாளர் சட்டங்களில் எந்த திருத்தங்களும் கொண்டுவரக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் மின் ஊழியர் அமைப்பு செயலாளர் அறிவழகன், இணைச்செயலாளர் மதுரை பெருநகர திட்ட செயலாளர் ரிச்சர்ட் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சோழவந்தான் மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் நாகராஜன், முத்துராமலிங்கம், புஷ்பவனம், சோமு, கண்ணன், சிங்கம், மோஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமங்கலம் மின்வாரிய அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.