மதுராந்தகம் அருகே குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


மதுராந்தகம் அருகே குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2021 4:41 PM IST (Updated: 20 July 2021 4:41 PM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே மாநில நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் முதுகரை என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு பஸ் நிறுத்தம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story