அம்மன் கோவில்களில் பக்தர்களுக்கு கூழ் வழங்க தடை; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு


அம்மன் கோவில்களில் பக்தர்களுக்கு கூழ் வழங்க தடை; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 20 July 2021 4:51 PM IST (Updated: 20 July 2021 4:51 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்துள்ள போதிலும் தற்போது ஆடி மாதம் தொடங்கி உள்ளதால் அம்மன் கோவில்களில் வழிபாடு செய்ய தடை ஏதும் இல்லை. ஆனால் கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்குகள் மேற்கொள்ள அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோவில்களில் அதிக கூட்டம் கூடாமல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது, கூழ்வார்த்து பக்தர்களுக்கு அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Next Story