குழந்தை திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் கைது


குழந்தை திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 20 July 2021 5:19 PM IST (Updated: 20 July 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

சின்ன காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் தாலுகா, பெரியஏலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (30) என்பவருக்கு கடந்த ஜூன் 13-ந் தேதி குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சமூகநலத்துறை மைய நிர்வாகி செல்வி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவின்படி, மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குமரேசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பெண்ணின் தாயார் உஷா ராணி உள்ளிட்ட 4 பேரை குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story