என்ஜினீயர் கொலையில் 5 பேர் கைது
என்ஜினீயர் கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி,ஜூன்.
சேடப்பட்டி அருகே உள்ள சின்னக்கட்டளை பஸ் நிறுத்தத்தில் நேற்று முன் தினம் இரவு சங்கையா என்பவரது மகன் என்ஜினீயர் முத்துராஜா (வயது 31) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சரோஜா, இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி கொலை குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
விசாரணையில், முத்துராஜாவை சிலர் கோஷ்டியாக சேர்ந்து தாக்கியதுடன் கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சின்னக்கட்டளையை சேர்ந்த ஆறுமுகத்தான் மகன் முத்துராஜா (28), கருப்பையா மகன் ஜெயபாண்டி (29), இவரது சகோதரர் கார்த்திக் (22), மணிகண்டன் மகன் ராஜதுரை (24) உள்ளிட்ட 5 பேைர போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story