கோஷ்டி மோதலில் 3 பேர் கைது


கோஷ்டி மோதலில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 1:02 AM IST (Updated: 21 July 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

கோஷ்டி மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழவந்தான்,ஜூலை
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.  இந்த நிலையில் அங்கு நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியின்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கம்பால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லதம்பி (வயது 29), கருப்புசாமி (30), கிருஷ்ணன் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story