மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 July 2021 12:17 AM IST (Updated: 22 July 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு உள்ளது.

கிருஷ்ணராயபுரம்
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 5 ஆயிரம் கனஅடி இருந்தது. பின்னர் தண்ணீர் 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. திறக்கப்பட்ட தண்ணீர் மாயனூர் கதவணைக்கு கடந்த 20-ந்தேதி இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 452 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து 11 ஆயிரத்து 832 கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் அணையிலிருந்து கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு 200 கனஅடியும், தென்கரை வாய்க்காலுக்கு 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலுக்கு 20 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story