ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் டாக்டர் போல் நடித்து 6½ பவுன் நகை நூதன திருட்டு


ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் டாக்டர் போல் நடித்து 6½ பவுன் நகை நூதன திருட்டு
x
தினத்தந்தி 21 July 2021 11:05 PM GMT (Updated: 2021-07-22T04:35:13+05:30)

ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் டாக்டர் போல் நடித்து 6½ பவுன் நகை நூதன திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு.

சென்னை,

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). நகைக்கடை அதிபர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது நகை கடைக்கு ‘டிப்டாப்’பாக உடையணிந்த ஆசாமி ஒருவர் வந்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், மகப்பேறு டாக்டராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் சஞ்சய் எனவும் அறிமுகமாகி உள்ளார்.

மேலும், நகைக்கடை ஊழியர்களிடம் மனைவிக்கு நகை ஒன்று வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார். நகையின் ‘மாடல்’ மட்டும் தற்போது தேர்வு செய்து வைத்து விட்டு செல்கிறேன் என்று கூறிய அந்த ஆசாமி, நகையை ஆஸ்பத்திரிக்கு கொடுத்து அனுப்புங்கள், அங்கே வைத்து பணத்தை கொடுத்து விடுகிறேன் என கூறி சென்றுள்ளார். இதை உண்மை என நம்பிய சக்திவேல் அந்த ஆசாமி தேர்வு செய்த நகையுடன் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார்.

அங்கு வந்த டிப்டாப் ஆசாமி, நகையை பெற்றுக் கொண்டு அதை செல்போனில் படம் பிடித்து மனைவிக்கு அனுப்ப வேண்டும் என கூறியவாறு 6½ பவுன் நகையுடன் அங்கிருந்து நைசாக நழுவிவி்ட்டார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சக்திவேல் இதுகுறித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story