சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு விற்பனை


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு விற்பனை
x
தினத்தந்தி 22 July 2021 8:58 PM GMT (Updated: 22 July 2021 8:58 PM GMT)

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.490-க்கு விற்பனை ஆனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 4½ லட்சம் டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.490-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.225-க்கும், செண்டுமல்லி ரூ.86-க்கும், பட்டுப்பூ ரூ.105-க்கும், ,ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.465-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், அரளி ரூ.180-க்கும், துளசி ரூ.60-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.

Next Story