துக்கம் விசாரித்து விட்டு வந்தபோது பரிதாபம்: கார் தலைகுப்புற கவிழ்ந்து 2 பேர் பலி; 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்


துக்கம் விசாரித்து விட்டு வந்தபோது பரிதாபம்: கார் தலைகுப்புற கவிழ்ந்து 2 பேர் பலி; 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 23 July 2021 2:51 AM IST (Updated: 23 July 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

துக்கம் விசாரித்து விட்டு வந்தபோது சித்தோடு அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

பவானி
துக்கம் விசாரித்து விட்டு வந்தபோது சித்தோடு அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர். 
துக்கம் விசாரிக்க...
ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. தற்போது இவர் சித்தோட்டை அடுத்த சந்தைமேடு பகுதியில் சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி யுவராணி. இவர்களுடைய மகன் நாகேந்திரன் (வயது 20). 
சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக மாரிமுத்து, யுவராணி, நாகேந்திரன் மற்றும் அவர்களுடைய உறவினர்களான அருண் (19), ரஞ்சித்குமார் ஆகியோர் ஒரு காரில் நேற்று முன்தினம் சென்றனர். 
தலைகுப்புற கவிழ்ந்தது
துக்கம் விசாரித்து விட்டு மீண்டும் காாில் சித்தோடு நோக்கி வந்தனர். காரை நாகேந்திரன் ஓட்டினார். சித்ேதாட்டை அடுத்த தயிர்பாளையம் பிரிவு அருகே வந்தபோது கார் நிலைதடுமாறி அங்கிருந்த கோவில் அருகே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் நாகேந்திரன், அருண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 
விபத்து ஏற்பட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று படுகாயம் அடைந்த நாகேந்திரன், அருண் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் 2 பேரும் கொண்டு செல்லப்பட்டனர். 
சாவு
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் மாரிமுத்து, யுவராணி, ரஞ்சித்குமார் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். 
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இறந்துபோன 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story