பிளஸ் 2 துணை தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு


பிளஸ் 2 துணை தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 11:06 AM IST (Updated: 23 July 2021 11:11 AM IST)
t-max-icont-min-icon

துணை தேர்வு எழுத விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகள் 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், நேற்றைய தினம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மீண்டும் தனித்தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் 27ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக அரசு தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும் அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்றும் அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது. 

விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் பிளஸ் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story