வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை


வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 23 July 2021 9:28 PM IST (Updated: 23 July 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

வில்லியனூர், ஜூலை.24-
வில்லியனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
வெளியூர் பயணம்
வில்லியனூர் அருகே சுல்தான்பேட்டை வளர்பிறை நகரை சேர்ந்தவர் முகமது புகாரி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா ஜின்னா (வயது 43). இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி பாத்திமா ஜின்னா தனது வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பூட்டை உடைத்து கொள்ளை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாத்திமா ஜின்னாவுக்கு தெரிவித்தனர்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், வெளியூரில் இருந்து சுல்தான்பேட்டைக்கு வந்து வீட்டை பார்வையிட்டார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 26 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.84 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
மர்மநபர்களுக்கு  வலைவீச்சு
இந்த கொள்ளை குறித்து வில்லியனூர் போலீசில் பாத்திமா ஜின்னா புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளை நடந்த வீட்டை போலீசார் பார்வையிட்டனர். 
பாத்திமா ஜின்னாவின் வீடு பூட்டியிருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story