தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 4:55 PM GMT (Updated: 23 July 2021 4:55 PM GMT)

தேனியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தேனி:
தேனி பழைய பஸ் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் சுந்தர்ராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ரவிமுருகன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story