5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
5-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மதுரை, ஜூலை
மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், மிட்டாய் வியாபாரி. இவரது மகன் ஜெயபிரசாத் (வயது 10). மதுரையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். அவன் ஆன்லைன் வகுப்பை சரிவர கவனிக்காமல் இருந்துள்ளான். இதனை அவனது தந்தை கண்டித்துள்ளார். இதனால் சிறுவன் ஜெயபிரசாத் அங்குள்ள ஒரு அறையின் உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டு போர்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 5-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story