பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்; விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்போனது. விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அம்மாபேட்டை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்போனது. விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பருத்தி மூட்டைகள்
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் புதன், வியாழன் ஆகிய 2 நாட்கள் பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற விற்பனைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்தும், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், மேட்டூர், கொளத்தூர், தேவூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, மற்றும் பவானி, அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் விவசாயிகள் 9 ஆயிரத்து 528 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதிக விலை
இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு குறைந்த பட்சமாக ரூ.6 ஆயிரத்து 939-க்கும், அதிக பட்சமாக ரூ.7 ஆயிரத்து 776-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.2 கோடியே 52 லட்சத்து 7 ஆயிரத்து 287-க்கு ஏலம்போனது.
கோவை, அவினாசி, புளியம்பட்டி, அன்னூர், தர்மபுரி, சேலம், பெருந்துறை, திருப்பூர், கோபி, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியை போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றார்கள். தொடர்ந்து 2-வது வாரமாக பருத்தி அதிக விலைக்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story