நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள், இடுபொருட்கள் இருப்பில் உள்ளது; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்


நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள், இடுபொருட்கள் இருப்பில் உள்ளது; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 July 2021 3:11 AM IST (Updated: 24 July 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள், இடுபொருட்கள் இருப்பில் உள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

ஈரோடு
நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள், இடுபொருட்கள் இருப்பில் உள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கொரோனா தாக்கம் காரணமாக காணொலி காட்சி மூலம், ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்கள் மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் என 15 இடங்களில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகள் கேட்டார். அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 97.12 அடியாகவும், 26.533 டி.எம்.சி. நீர் இருப்பும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது 12 ஆயிரத்து 721 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும், 14 ஆயிரத்து 247 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நெல் விதைகள் 62 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் ஒரு மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 7 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 52 மெட்ரிக் டன் விதைகளும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
உரங்கள் -இடுபொருட்கள்
ரசாயன உரங்களான யூரியா 8 ஆயிரத்து 909 மெட்ரிக் டன்னும், டி.எ.பி. 3 ஆயிரத்து 448 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 4 ஆயிரத்து 288 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 8 ஆயிரத்து 399 மெட்ரிக் டன்னும் மற்றும் கலப்பு உரங்கள் 2 ஆயிரத்து 670 மெட்ரிக் டன்னும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் பிற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன.
பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் 2 ஆயிரத்து 450 ஏக்கர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 495 ஏக்கர் இலக்கு எட்டப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறையின் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தில் 3600 எக்டர் பொருள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 348 எக்டர் இலக்கு எட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி மற்றும் அரசு அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
1 More update

Next Story