மணல் கடத்தல்; 3 பேர் கைது
தொழுப்பேடு அருகே 2 மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அச்சரப்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் போலீசார் தொழுப்பேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த வேட்ரம்பாக்கம் மோகன் (வயது 36), இந்தலூர் அருண் என்கிற ஜானகிராமன் (42) மற்றும் லாரியில் மணல் கடத்தி வந்த திண்டிவனம் தாலுகா, ஒலக்கூர் அருகே உள்ள சாரம் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (31) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை போலீசார் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தனர். 2 மாட்டு வண்டிகளையும், லாரியையும் போலீசார் கைப்பற்றினர்.
Related Tags :
Next Story