போலீஸ் உடல்திறன் தேர்வுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - போலீஸ் துறை அறிவிப்பு


போலீஸ் உடல்திறன் தேர்வுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - போலீஸ் துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 24 July 2021 9:21 AM IST (Updated: 24 July 2021 9:21 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு போலீஸ்துறையில் 2020-ம் ஆண்டுக்கான போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத்துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை போலீசாருக்கான எழுத்துத்தேர்வில் தேர்வான காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 28 பேருக்கு உடல் திறன் தகுதி தேர்வுகள் வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் காஞ்சீபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

மேலும் உடல்திறன் தகுதி தேர்வில் பங்கேற்க உள்ள நபர்கள், தங்களது அனுமதி நுழைவு சீட்டில் குறிப்பிட்டுள்ள உடல் திறன் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள நாட்களுக்கு முன்னதாக, 4 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவினை பெற்று அதன் அறிக்கையை கட்டாயம் கொண்டு வர வேண்டும். அந்த அறிக்கை வந்த பின்னரே உடல் திறன் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தேர்வர்கள் தங்களது அழைப்பாணை கடிதத்தை www.tnusrbonline.org வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story