காஞ்சீபுரம் நகராட்சி பசுமை உரக்கிடங்கில் கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரம் நகராட்சி பசுமை உரக்கிடங்கில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 24 July 2021 9:45 AM IST (Updated: 24 July 2021 9:45 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் நகராட்சி நத்தப்பேட்டை கிராமத்தில் உள்ள பசுமை உரக்கிடங்கை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் நகராட்சியில் 51 வார்டுகளிலும் தினசரி சேகரமாகும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு நத்தப்பேட்டை கிராமத்தில் உள்ள பசுமை உரக்கிடங்கில் 5 டன் அளவு கொண்ட 3 உரம் தயாரிக்கும் மையங்கள் மூலமாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து இயற்கை உரமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. திடக்கழிவில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பைகள் சேகரிக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டும், இயற்கை உரம் தயாரிப்பதையும் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் கழிவறை வசதி, இட வசதி, ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் போன்றவை உள்ளதா எனவும் குழந்தைகள் எவ்வாறு கல்வி கற்கின்றனர் எனவும் கேட்டு தெரிந்து கொண்டார்.

நத்தப்பேட்டையில் உள்ள 8 ஏக்கர் பரப்பளவிலான குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தி நிலத்தை மீட்டு அங்கு பூங்கா அமைக்கவும் கலெக்டர் நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் லட்சுமி, ஆனந்த ஜோதி, சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Next Story