அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனையானது.
அந்தியூரில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும். அதன் படி நேற்று கால்நடை சந்தை கூடியது. இந்த கால்நடை சந்தைக்கு ஈரோடு, மேட்டூர், சேலம் மாவட்டம் எடப்பாடி, கொங்கணாபுரம், கொளத்தூர், சத்தியமங்கலம், பர்கூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.
இதில் காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.80 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனையானது. இதேபோல் கொங்கு காளைமாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்திற்கும் ஏலம்போனது. சிந்து பசுமாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
இதேபோல் ஜெர்சி இன பசுமாடு குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.35 ஆயிரத்திற்கும், பர்கூர் இன காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 ஆயிரத்திற்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்திற்கும் அதிகபட்ச விலையாக ரூ.65 ஆயிரத்திற்கும் விற்பனையானது. அதன் கன்றுக்குட்டிகள் குறைந்த பட்ச விலையாக ரூ.5 ஆயிரத்திற்கும், அதிகபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டன.
ஈரோடு, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டூர், எடப்பாடி, தர்மபுரி, மேச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கால்நடைகளை வாங்கி சென்றார்கள்.
Related Tags :
Next Story