மோடி-அமித்ஷாவை விமர்சித்த பாதிரியாரை கண்டித்து பெருந்துறை, கோபியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
மோடி-அமித்ஷாவை விமர்சித்த பாதிரியாரை கண்டித்து பெருந்துறை, கோபியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மோடி-அமித்ஷாவை விமர்சித்த பாதிரியாரை கண்டித்து பெருந்துறை, கோபியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பெருந்துறை
தூத்துக்குடியைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர், சில நாட்களுக்கு முன்பு, பாரதீய ஜனதா கட்சியைப் பற்றியும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நாகர்கோவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர் காந்தி ஆகியோரை குறித்தும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரை கண்டித்து பெருந்துறையில் பா.ஜ.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெருந்துறை பஸ் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பா.ஜ.க.மாநில செயற்குழு உறுப்பினர் இமயம் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் டி.என்.ஆறுமுகம், பெருந்துறை நகர பா.ஜ.க.தலைவர் கருடாவிஜயகுமார், மாவட்ட துணைச்செயலாளர் சாஸ்தா சரவணன், நகரச் செயலாளர்கள் விஸ்வநாதன், நவீன், மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா, நகரத் துணைத் தலைவர்கள் லோகநாதன், சரஸ்வதி, இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.
கோபி
இதேபோல் கோபி பஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரத்தலைவர் மகேஸ்வரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாதிரியாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story