காஞ்சீபுரம் அருகே சுகாதார நிலையத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம்


காஞ்சீபுரம் அருகே சுகாதார நிலையத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 25 July 2021 7:36 AM IST (Updated: 25 July 2021 7:36 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே சுகாதார நிலையத்தில் நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில், குழந்தைகளை அதிகம் பாதிப்படைய செய்யும் நியுமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக நியுமோகோக்கல் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் முன்னிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) பழனி, வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Next Story