கணவர் கண் எதிரே பெண் பலி


கணவர் கண் எதிரே பெண் பலி
x
தினத்தந்தி 26 July 2021 12:21 AM IST (Updated: 26 July 2021 12:21 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் கணவர் கண் எதிரே பெண் பலியானார்.

காரைக்குடி,

காரைக்குடி வ.உ.சி.ரோடு பகுதியில் வசிப்பவர் ராமலிங்கம். இவர் பந்தல் போடும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 57). இவர்கள் இருவரும் கோவிலூரில் உள்ள தனது மகன் சீனி வீட்டுக்கு சென்றிருந்தனர். மீண்டும் நேற்று காலையில் காரைக்குடி திரும்புவதற்காக கோவிலூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணோடு வந்த நபர் முனியம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டார். இதில் கீழே விழுந்த முனியம்மாளுக்கு பலத்த அடிபட்டது. உடனடியாக முனியம்மாள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண் எதிரில் மனைவி பலியானதை அறிந்து ராமலிங்கம் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலூர் போலீஸ் சோதனை சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக்கொண்டு மோட்டார் சைக்கிள் நபரை தேடி வருகின்றனர்.



Next Story