சத்தியமங்கலம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை, இண்டியம்பாளையம், அரசூர், உக்கடம், செண்பகபுதூர், கோணமூலை ஆகிய ஊராட்சிகளில் அந்தந்த பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வரும் பெண்கள் நேற்று மதியம் 1 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு சார்பில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு அரசு நிர்ணயித்த தினக்கூலியான ரூ.273-யை வழங்க வேண்டும்.
நீட்டிக்க வேண்டும்
மேலும் 2 வாரங்கள் வேலை என்பதை நீட்டித்து தினமும் வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் சுடர் நடராஜ், நிர்வாகிகள் என்.முருகேஷ், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story