காஞ்சீபுரத்தில் கம்பால் தாக்கியதில் டிரைவர் சாவு; மனைவி கைது


காஞ்சீபுரத்தில் கம்பால் தாக்கியதில் டிரைவர் சாவு; மனைவி கைது
x
தினத்தந்தி 27 July 2021 11:21 AM IST (Updated: 27 July 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் கம்பால் அடித்து தாக்கியதில் டிரைவர் பரிதாபமாக பலியானார். இந்ந வழக்கில் மனைவி கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே கீழ்க்கதிர்ப்பூர் கிராமம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (வயது 35). டிரைவர். இவரது மனைவி அர்ச்சனா (32). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆனதாக தெரிகிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், கங்காதரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த கங்காதரனுக்கும், மனைவி அர்ச்சனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சாவு

இந்த தகராறு முற்றியதில், கங்காதரன் அர்ச்சனாவை தாக்க வந்தநிலையில், ஆத்திரமடைந்த அர்ச்சனா கம்பால் கணவரை பலமாக தாக்கியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story