மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை + "||" + Rs 5 crore occupied land belonging to Kanchipuram Ekambaranathar temple reclaimed by Minister Sekarbabu

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலங்கள் சென்னையில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நேற்று மீட்கப்பட்டது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமாக சென்னை மாநகரில் முக்கிய இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் சமீப காலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவில் வசம் கொண்டுவரப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியின் அருகில் உள்ள 33 கிரவுண்ட் விலை மதிப்புமிக்க இடம் தனியார் கல்வி நிறுவனத்திடமிருந்து மீட்கப்பட்டு, தற்போது கோவில் பெயரில் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி நேற்று, சென்னை கீழ்ப்பாக்கத்தில் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலுக்கு சொந்தமான 1,970 சதுர அடி வணிக வளாகத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் மீட்கப்பட்டது.

ரூ.5 கோடி மதிப்பு

இந்த இடங்களை கோவிலின் எவ்வித அனுமதியின்றி ஸ்ரீகண்டன் என்பவர் 1,399 சதுரஅடி, சூரியநாராயணன் 112 சதுர அடி, பி.டி.அபுபக்கர் 459 சதுர அடி உட்பட ஆக மொத்தம் 1,970 சதுர அடி இடத்தை வணிக வளாகம் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் நடவடிக்கை எடுத்து கோவில் வசம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடியாகும். இதேபோல் சென்னை நகரின் பிரதான சாலையில் உள்ள மற்ற கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவில் வசம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.மோகன், தயாகம் கவி, காஞ்சீபுரம் மண்டல இணை கமிஷனர் பெ.ஜெயராமன், சென்னை மண்டல உதவி கமிஷனர் கவேனிதா, காஞ்சீபுரம் மண்டல உதவி கமிஷனர் ஜெயா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் சு.முத்துசாமி ஆஜர்
கொரோனா ஊரடங்கை மீறியதாக போலீசார் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் ஆஜரானார்.
2. புழல் ஏரியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை: சென்னை மாநகருக்கு 1,000 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம்
சென்னை மாநகருக்கு அதிகபட்சமாக 1,000.58 மில்லியன் லிட்டர் குடிநீர் நேற்று வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
3. 144 நாட்களுக்கு பிறகு மீண்டும் சேவை: 1-ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பஸ்கள் இயக்கப்படும் அமைச்சர் தகவல்
கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து 1-ந் தேதி முதல் குளிர்சாதன வசதி உள்ள அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
4. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உள்பட 12 முன்னாள் அமைச்சர்களுக்கு நோட்டீஸ் வருமானவரித்துறை அதிரடி நடவடிக்கை
பணம் மதிப்பிழப்பின்போது நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களில் பெயர் இருந்தது குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு உள்ளது.
5. தமிழகத்தில் வரும் 26-ந்தேதி 3-வது மெகா தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் வரும் 26-ந்தேதி 3-வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை