மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் 6,399 குடும்பங்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் + "||" + New ration cards for 6,399 families

வேலூர் மாவட்டத்தில் 6,399 குடும்பங்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள்

வேலூர் மாவட்டத்தில் 6,399 குடும்பங்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள்
6,399 குடும்பங்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள்
வேலூர்

தமிழகத்தில் புதிய ரே‌ஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் புதிய ரே‌ஷன் அட்டை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் 15 ஆயிரம் பேர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த 6,399 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய அட்டைகள் வந்துள்ளன. ஓரிரு நாட்களுக்குள் இந்த ரேஷன் அட்டைகள் அவர்களுக்கு வழங்கப்படும். ஆகஸ்டு மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

வேலூர் மாவட்டத்தில் மேலும் பலர் புதிய ரே‌ஷன் அட்டைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப்பட்டு, அட்டை வழங்குவதற்கான நடைமுறைகளை தொடங்குவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்