மாவட்ட செய்திகள்

தெங்குமரஹடா வனப்பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை சுமந்து மோயாற்றை கடந்த கிராமமக்கள்- பாலம் கட்டி கொடுக்க கோரிக்கை + "||" + thegumaragada forest

தெங்குமரஹடா வனப்பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை சுமந்து மோயாற்றை கடந்த கிராமமக்கள்- பாலம் கட்டி கொடுக்க கோரிக்கை

தெங்குமரஹடா வனப்பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை சுமந்து மோயாற்றை கடந்த கிராமமக்கள்- பாலம் கட்டி கொடுக்க கோரிக்கை
தெங்குமரஹடா வனப்பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை பாடையில் கட்டி கிராம மக்கள் மோயாற்றை கடந்து சென்றனர். அங்கு பாலம் கட்டி கொடுக்க மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பவானிசாகர்,

தெங்குமரஹடா வனப்பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை பாடையில் கட்டி கிராம மக்கள் மோயாற்றை கடந்து சென்றனர். அங்கு பாலம் கட்டி கொடுக்க மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பழங்குடி கிராமம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. அங்குள்ள தெங்குமரஹடா ஊராட்சியில் உள்ள கல்லாய்பாளையம் கிராமத்துக்கு செல்ல அடர்ந்த வனப்பகுதியில் ஓடும் மோயாற்றை கடக்க வேண்டியது உள்ளது. 
மோயாற்றில் தற்போது செந்நிறத்தில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மலைக்கிராம மக்கள் ஆற்று வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல், உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து செல்கிறார்கள்.
மூதாட்டி சாவு
இந்தநிலையில் கல்லம்பாளையம் கிராமத்தில் ஆதிவாசி பழங்குடி இனத்தை சேர்ந்த திவணன் என்பவரது மனைவி ராமி (வயது 65) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர்களது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் அருகே உள்ள கரிக்கூர் கிராமம் ஆகும். எனவே இறந்த ராமியின் உடலை அடக்கம் செய்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பவானிசாகர், மேட்டுப்பாளையம் வழியாக சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிக்கூர் கிராமத்திற்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.
தெங்குமரஹடா ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் ராமியின் உடலை பாடை கட்டி அடர்ந்த வனப்பகுதி வழியாக கொண்டு செல்லப்பட்டது. 
பாலம் கட்ட கோரிக்கை
அப்போது மோயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் கிராமமக்கள் மூதாட்டியின் உடலை தோளில் சுமந்தபடி ஆற்றை கடந்து சென்றார்கள். பிறகு சாலை வசதி உள்ள பகுதிக்கு வந்ததும், ஆம்புலன்சில் மூதாட்டியின் உடலை ஏற்றி கொண்டு சென்றனர்.
தெங்குமரஹடா ஊராட்சியில் உள்ள தெங்குமரஹடா, கல்லம்பாளையம், அல்லிமாயாறு, சித்திரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வனப்பகுதியில் ஓடும் மோயாற்றை கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வன கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மோயாற்றின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.