வரி செலுத்தாமல் இயங்கிய 2 வெளிமாநில ஆம்னி பஸ்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்- ரூ.11½ லட்சம் அபராதம் விதிப்பு

வரி செலுத்தாமல் இயங்கிய 2 வெளிமாநில ஆம்னி பஸ்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்- ரூ.11½ லட்சம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 28 July 2021 4:09 AM IST (Updated: 28 July 2021 4:09 AM IST)
t-max-icont-min-icon

வரி செலுத்தாமல் இயங்கிய 2 வெளிமாநில ஆம்னி பஸ்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.11½ லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு

வாகன தணிக்கை
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு உத்தரவுக்கு பின்னர் அனைத்து வாகன போக்குவரத்தும் அதிகரித்து உள்ளது. இதில், சிலர் வாகன போக்குவரத்து விதிகளை மீறியும், தகுதியற்ற வாகனங்களை விதிகளை மீறி இயக்கியும் வருவதால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் ஈரோடு மண்டல துணை போக்குவரத்து ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், ஈரோடு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அபராதம்
அப்போது 996 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு 118 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அரசுக்கு வரி செலுத்தாத 2 வெளிமாநில ஆம்னி பஸ்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் போக்குவரத்து மற்றும் வாகன கட்டுப்பாடு விதிகளை மீறியதாக வாகன உரிமையாளர்களுக்கு ரூ.11 லட்சத்து 47ஆயிரத்து 435 அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 235 வரியாகவும், ரூ.56 ஆயிரத்து 800 அபராதமாகவும் உடனடியாக வசூலிக்கப்பட்டதாக ஈரோடு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story